பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அன்மோல் பிஷ்னோய் தேடப்பட்டு வந்த நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக கூறப்படும் அன்மோல் பிஷ்னோய் காவலில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவரை கைது செய்ய உதவுபவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.