திருப்பதி ஏழுமலையான் முன் ஒரு மணி நேரம் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறி ரூ.1.50 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆந்திர, தமிழக முதல்வர்களுக்கு நடிகை ரூபிணி புகார் மனு அளித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த சரவணன் என்பவர் தனக்கு அறிமுகமான நிலையில் தேவஸ்தான அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும், தேவையான வசதிகளை செய்து தருவதாகவும் கூறியதாக ரூபிணி தெரிவித்தார்.