பிரபல நடிகை டோலி சோஹி காலமானார்

63183பார்த்தது
பிரபல நடிகை டோலி சோஹி காலமானார்
பல மாதங்களாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயுடன் போராடி வந்த டிவி நடிகை டோலி சோஹி (48) வெள்ளிக்கிழமை காலை காலமானார். 'கலாஷ்', 'ஹிட்லர் திதி', 'டெவோன் கே தேவ் மகாதேவ்', 'ஜனக்' போன்ற பல டிவி நிகழ்ச்சிகளில் இவர் நடித்துள்ளார். டோலி சோஹியின் சகோதரி அமந்தீப் சோஹியும் வியாழன் இரவு மஞ்சள் காமாலையால் இறந்தார். ஒரே வீட்டில் அடுத்தடுத்து இரண்டு சகோதரிகள் உயிரிழந்துள்ளது குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. பலரும் இவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி