கோவை மாவட்டம் அன்னூர் அருகே பாஜக பிரமுகர் விஜயகுமார் வீட்டில் ரூ.1 கோடி கொள்ளை போன சம்பவம் தொடர்பாக பொய்யான தகவல்களை கூறி போலீசாரை அலைக்கழித்ததாக இன்று (மே 20) விஜயகுமார் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரூ.18.5 லட்சம் மற்றும் 9 சவரன் தங்க நகைகள் மட்டுமே கொள்ளை போனது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை தனிப்படை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.