வருங்கால வைப்பு நிதியில் அதிக பென்ஷன் பெறுவதற்கு ஊழியர்களின் சம்பள விவரத்தை தொழில் நிறுவனங்கள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை மே 31ம் தேதி வரை நீட்டித்து இபிஎஃப்ஓ அமைப்பு உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர்களின் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து உடனடியாக அதனை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பி.எப்., நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்களும், ஓய்வூதியர்களும் விரைவில் அதன் பலனை பெறுவார்கள் என பி.எப்., அமைப்பு தெரிவித்துள்ளது.