பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையில் இருந்து தொடர்ந்து நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவு நீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியுள்ளது. இன்று(செப்.10) காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 639 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இன்று(செப்.10) காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 95. 25 அடியாக உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடியும், தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 750 கன அடியும், காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு 100 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது. இதைப்போல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2, 300 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 3, 250 கன அடி தண்ணீர் பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு வருகிறது.