ஊத்துக்குளி பேரூராட்சிக்குட்பட்ட வேலம்பாளையம், செரவேலம்பாளையம், நடு வேலம்பாளையம் பகுதிகளில் 500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு குடிநீர் வந்து 10 நாட்களுக்கும் மேல் ஆன நிலையில் குடிநீர் தேவை குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடி காலி குடங்களுடன் காங்கயம் ரோட்டில் ஒன்று கூடினர். காங்கயம் ரோடு, மேம்பாலம் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சாலை மறியல் குறித்து ஊத்துக்குளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்வீன்பானு, எஸ் ஐ பாலமுருகன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பேரூராட்சி துணைத் தலைவர் சரவணன், மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் குடிநீர் சீராக விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததன் அடிப்படையில் பொதுமக்கள் சமரசம் அடைந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஊத்துக்குளி ஆர் எஸ் -காங்கயம் சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.