குன்னத்தூர் மற்றும் ஊத்துக்குளி பகுதிகளில் மானாவாரி நிலக்கடலை விளைச்சலை அதிகரிக்க விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பம் வேளாண்மை துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
குன்னத்தூர், ஊத்துக்குளி பகுதிகளில் வேளாண்மை பயிர்களாக பயறு வகைகள், எண்ணெய்வித்து பயிர்கள் ஆகியவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக நிலக்கடலை தென்மேற்கு பருவ மழை காலத்தில் அவிநாசி, திருப்பூர் மற்றும் ஊத்துக்குளி வட்டாரங்களில் நிலக்கடலை பெரும்பாலும் மானாவாரி பயிராக சுமார் 9000 ஹெக்டரில் சாகுபடி ஆகிறது. மானாவாரி நிலக்கடலையில் விளைச்சலை அதிகரிக்க பல்வேறு தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு வேளாண்மை துறையின் மூலம் எடுத்துக் கூறி வருகிறது. விளைச்சலுக்கு முக்கிய காரணியாக இருப்பது ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரித்தல் தொழில் நுட்பம் பெரும் பங்கு வகிக்கிறது. ஊட்டமேற்றிய தொழு உரம் இடுதல் குறித்து பல்வேறு தொழில்நுட்பங்களை இப்பகுதி விவசாயிகளுக்கு திருப்பூர் மாவட்ட தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு அலுவலர் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் ஆகியோர் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.