வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்

59பார்த்தது
வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்
பெருந்துறையை அடுத்துள்ள சென்னிமலை, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1, 412 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 11 காசுக்கும், அதிகபட்ச விலையாக 26 ரூபாய் 11 காசுக்கும், சராசரி விலையாக 25 ரூபாய் 11 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 573 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 14 ஆயிரத்து 111 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி