ஊத்துக்குளியில் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி.

287பார்த்தது
ஊத்துக்குளியில் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி.
ஊத்துக்குளியில் நெடுஞ்சாலை துறையினரின் அஜாக்கிரதையால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஊத்துக்குளி டவுன் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை வழியாக செல்லும் பழுதடைந்துள்ள குழாய்களை சீரமைப்பு செய்வதற்காக சாலையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. குழாய் சீரமைப்புபணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அதனை சரி செய்யாமல் விட்டு விட்டதால் ஜல்லிகள் பெயர்ந்து சிதறி இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் ஜல்லிகள் சறுக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் இவ்வழியாக செல்லும் பொழுது ஜல்லிக்கற்கள் வாகனத்தில் உள்ள டயர்களில் பட்டு தெறிக்கும் பொழுது சாலையோரத்தில் நிற்பவர்களின் மீது ஜல்லிகள் தெறித்து விழுகின்றது. இதனால் நடைபாதையாக செல்பவர்களும் மிகவும் அச்சப்படுகின்றனர். நகரின் மையப்பகுதியில் இதுபோன்று சாலைகள் சீரமைக்கப்படாமல் இருப்பதால் இருசக்கர வாகன விபத்துக்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே வாகன ஓட்டிகளின் நலனை கருதி உடனடியாக நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை சீரமைக்கப்பட வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி