பெருந்துறை அருகே ரோட்டில் மயங்கி விழுந்த மூதாட்டி சாவு.

59பார்த்தது
பெருந்துறை அருகே ரோட்டில் மயங்கி விழுந்த மூதாட்டி சாவு.
பெருந்துறையை அடுத்துள்ள திங்களூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக ரோட்டோரத்தில் மயங்கி விழுந்த மூதாட்டி ஒருவர் இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் , ஈரோடு, வீரப்பன் சத்திரம், பெருமாள்என்பவரது மனைவி வேம்பு (70) என்பது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பின் அவரது சடலத்தை குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி