வங்கக் கடலில் உள்ள ஃபெஞ்சல் புயல் இன்று (நவ., 30) இரவு அல்லது நாளை (டிச., 01) காலை கரையை கடக்கும் என்றும் புயல் கரையை நெருங்க தாமதமாக, தாமதமாக சென்னை, அண்டை மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதிப் ஜான் தெரிவித்துள்ளார். மரக்காணம், மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்றும் இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளார். மேலும், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு வானிலை ஆய்வு மைய அறிக்கையை பார்க்கவும் அறிவுத்தியுள்ளார்.