விஜயகாந்த் மறைவுக்கு சர்வ கட்சியினர் பெருந்துறையில் அஞ்சலி.

52பார்த்தது
விஜயகாந்த் மறைவுக்கு சர்வ கட்சியினர் பெருந்துறையில் அஞ்சலி.
திரைப்பட நடிகரும், தேமுதிகவின் நிறுவனத் தலைவருமான, விஜயகாந்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பெருந்துறையில் அனைத்து கட்சியினர் பங்கேற்ற மௌன ஊர்வலம் நடைபெற்றது. பெருந்துறை தொகுதி அனைத்துக் கட்சிகளின் சார்பில், தேமுதிகவின் நிறுவனத் தலைவரும், திரைப்பட நடிகருமான விஜயகாந்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. தேமுதிகவின் பெருந்துறை ஒன்றிய செயலாளர் தலைமையில் பெருந்துறை புதிய பஸ் நிலையம் பகுதியில் துவங்கிய இந்த அமைதி ஊர்வலம், பெருந்துறை நகரின் முக்கிய வீதிகள் வழியாக, பெருந்துறை அண்ணா சிலையை வந்தடைந்து இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், பேரூர் செயலாளர் கல்யாண சுந்தரம், யூனியன் கவுன்சிலர் பழனிச்சாமி, தமிழ்நாடு பாபு, நாகவிலாஸ் அப்புகுட்டி, திமுக சார்பில் ஒன்றிய செயலாளர்கள் கேபி சாமி, சின்னச்சாமி, மதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் கந்தசாமி, கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சின்னச்சாமி, சமக சார்பில் தொகுதி பொறுப்பாளர் பொன்முத்து, பாஜக சார்பில் இமயம் சந்திரசேகர், ஆட்டோ ஆறுமுகம், மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி