சென்னிமலை போலீஸ் ஸ்டேஷனில் 16 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

4682பார்த்தது
சென்னிமலை போலீஸ் ஸ்டேஷனில் 16 துப்பாக்கிகள் ஒப்படைப்பு
லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிகளின்படி சென்னிமலை போலீஸ் நிலையத்தில் உரிமத்துடன் கூடிய 16 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சென்னிமலை ஒன்றியத்தில் காங்கயம், ஈரோடு, பெருந்துறை ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய 22 கிராம ஊராட்சிகள் உள்ளது. இதில் குமாரவலசு, வடமுகம் வெள்ளோடு, முகாசி புலவன்பாளையம், கவுண்டச்சி பாளையம், புங்கம்பாடி மற்றும் வி. குட்டப்பாளையம் ஆகிய 6 ஊராட்சிகள் வெள்ளோடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஊராட்சிகள் ஆகும். மீதமுள்ள 16 ஊராட்சிகள் சென்னிமலை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டவை ஆகும். இந்த 16 ஊராட்சிகளில் 18 பேர் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் வைத்துள்ளனர்.

தற்போது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் விதி முறைகளின்படி 16 பேர் தங்களது துப்பாக்கிகளை சென்னிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மீதமுள்ள 2 துப்பாக்கிகள் வங்கி பாதுகாப்பு பணிக்காக அவர்களிடமே இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி