வைகாசி மாத பிறப்பை யொட்டி பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

54பார்த்தது
வைகாசி மாத பிறப்பை யொட்டி பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு
வைகாசி மாத பிறப்பையொட்டி
ஈரோடு பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு


ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர்(பெருமாள்) கோயிலில் வைகாசி மாத பிறப்பையொட்டி நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று மூலவரை வழிபட்டு சென்றனர்.
ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி மாத தேர்த்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்நிலையில், தமிழ் மாதம் வைகாசி பிறப்பையொட்டி ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அங்குள்ள கொடி மரத்தை வழிபட்டு, 27 முறை கோயில் பிரகாரத்தை வலம் வந்து, ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடி மரத்தில் வைத்து, மூலவரை வழிபட்டு சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி