கருப்புக்கொடி ஏந்தி நெடுஞ்சாலை துறையினர் ஆர்ப்பாட்டம்

58பார்த்தது
கருப்புக்கொடி ஏந்தி நெடுஞ்சாலை துறையினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கருப்புகொடி ஏந்தி நெடுங்சாலைத் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.
மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண் டும். கிராமப்புற இளைஞர் களுக்கு நெடுஞ்சாலை பரா மரிப்பு பணிகள் வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையில் நிரந்தர பணியி டங்களில் ஓய்வு பெற்ற ஊழியர்களை கொண்டு நிரப்ப கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு
நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங் கம் சார்பில் ஈரோட்டில் நேற்று கருப்பு கொடியேந்தி ஆர்பாட்டம் நடைபெற் றது. ஈரோடு மூலப்பாளை யத்தில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகத் தின் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் செங் கோட்டையன் தலைமை தாங்கினார்.

கோட்ட செயலாளர் ராஜேந்திரன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலா ளர் விஜய மனோகரன்துவக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் சீனி வாசன் சிறப்புரையாற்றி னார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் சிங்கராயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். முடிவில் பாபு நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி