சூதாட்ட கிளப் நடத்திய திமுக பகுதி செயலாளர் மீது வழக்கு

77பார்த்தது
சூதாட்ட கிளப் நடத்திய திமுக பகுதி செயலாளர் மீது வழக்கு
ஈரோடு அருகே மனமகிழ்மன்றம் என்ற பெயரில் சூதாட்ட கிளப் நடத்திய திமுக பகுதி செயலாளர் உட்பட எட்டு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


ஈரோடு அடுத்த காலிங்கராயன் பாளையத்தில் அனுமதி இல்லாமல் சூதாட்ட கிளப் நடத்தி வருவதாக சித்தோடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. காளிங்கராயன்பாளையத்தில் சோதனை நடத்திய பொழுது அங்கு காளிங்கராயன் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சூதாட்ட கிளப் நடைபெற்று வந்ததும் அதனை திமுகவை சேர்ந்த சூரியம்பாளையம் பகுதி செயலாளராக உள்ள குமாரவடிவேல் என்பவர் நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து திமுக பகுதி கழக செயலாளர் குமாரவடிவேல் உட்பட 8 பேர் மீது சித்தோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு. மனம்மகிழ் மன்றத்தில் சிக்கிய 7 பேர் கைது. அவர்களிடமிருந்து 4 வண்ணங்களில் அச்சிடப்பட்ட 627 டோக்கன்களும் காவல்துறையினர் பறிமுதல். மேலும் தலைமறைவாக உள்ள திமுக பகுதி கழக செயலாளர் குமாரவடிவேலை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி