விலங்குகள் ஆம்புலன்ஸில் டிரைவர் பணிக்கு அழைப்பு

566பார்த்தது
விலங்குகள் ஆம்புலன்ஸில் டிரைவர் பணிக்கு அழைப்பு
தமிழக அரசு சார்பில், விலங்குகளுக்கான ஆம்புலன்ஸ் சேவை விரைவில் செயல்பட உள்ளதால், ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் பணிக்கு, 8-ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். சம்பளம் 15,820 ரூபாய். 24 முதல் 35 வயதுக்கு உட்பட்ட 162.5 செ.மீ. , உயரமுள்ள, லைசென்ஸ் எடுத்து, 3 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பேட்ஜ் எடுத்து ஒரு வருடம் நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஆம்புலன்ஸ் உதவியாளர் பணிக்கு கல்வித்தகுதி, பிளஸ்-2 தேர்ச்சி. சம்பவம் 15,725 ரூபாய். 19 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் வரும்10ம் தேதி காலை நேர்முக தேர்வு நடக்க உள்ளது.

தொடர்புடைய செய்தி