அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் உறுதி

74பார்த்தது
அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் உறுதி
ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் நேற்று ஈரோடு காசிபாளையம், சத்யாநகர், சிலோன்காலனி, பெரியசடையம்பாளையம், ரகுபதிநாயக்கன்பாளையம், குறிக்காரன்பாளையம், மூலப்பாளையம், டெலிபோன்நகர், என்ஜிஜிஓ காலனி, பாரதிநகர், மாணிக்கம்பாளையம், வாய்க்கால்மேடு, கணபதிநகர், நல்லிதோட்டம், காமதேனுநகர், மாணிக்கம்நகர், அடுக்குபாறை, வில்லரசம்பட்டி நால்ரோடு, காந்திநகர், தென்றல்நகர், சக்திநகர், ஈபீபி நகர், சூளை, சிஎன் கல்லூரி, கனிராவுத்தர்குளம், அம்மன்நகர், கல்லாங்காடு, எல்லப்பாளையம், கங்காபுரம், கொங்கம்பாளையம், ஆயப்பாளி, மாமரத்துப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் அசோக்குமார் பொதுமக்களிடம் பேசியதாவது, ஈரோட்டின் வளர்ச்சிக்காக என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டுமோ அந்த திட்டங்களை எல்லாம் ஒன்றிய அரசின் மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக ஈரோட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பேசினார். வேட்பாளருடன் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் கே. வி. ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, பகுதி செயலாளர் கே. சி. பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி