மளிகை கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற இருவர் கைது

4234பார்த்தது
மளிகை கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற இருவர் கைது
மளிகை கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற இரண்டு பேர் கைது

நம்பியூர் செக்கு மாரியம்மன் கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக சிறுவலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அங்கு சென்ற போலீசரும் மளிகை கடைகளில் சோதனை செய்தனர். அப்போது அங்கு உள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையின் உரிமையாளரான குப்புசாமி வயது 56 என்பதை கைது செய்தனர்.

இதேபோல் டிஎன் பாளையம் அரசமரம் வீதியில் மளிகை கடையில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கடை உரிமையாளராக ரங்கநாதன் வயது 52 என்பதை போலீஸார் கைது செய்தனர். மேலும் இந்த கடையில் இருந்த 7 புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகள் போலீசார் பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி