நடுரோட்டில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

65பார்த்தது
நடுரோட்டில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
கொண்டையம்பாளையத்தில் நடுரோட்டில்
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
டி. என். பாளையம் அடுத்துள்ள கொண்டையம்பாளையம் ஊராட் சியில் அரசு நடுநிலைப்பள்ளி அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு ரோட்டை பறித்து பவானி ஆற்று தண்ணீர் கொண்டு செல்ல குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வீணாக வெளியேறிக் கொண்டு இருக்கிறது. மேலும் தண்ணீர் வெளியேறிக்கொண்டு இருக்கும் அத்தாணி - சத்தியமங்கலம் ரோடு முக்கிய பாதையா கும். அதனால் அங்கு எப்போதும் வாகனங்கள் சென்று வந்த படி இருக்கும்.
ரோட்டில் தண்ணீர் தேங்கி இருப்பதால் அந்த இடத்தில் சேத மும் ஏற்பட்டு விட்டது. இருசக்கர வாகன ஓட்டிகளும் தடுமாறி செல்கிறார்கள். கடந்த ஒரு மாதமாக இதே நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகிகள் உடனே குழாய் உடைப்பை சரிசெய்து, குடிநீர் வீணாவதை தடுக்கவேண்டும் என்று அந்தபகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி