கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற மாரத்தான்

85பார்த்தது
ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தி கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர் கலந்து கொண்டனர் இந்த மாரத்தான் போட்டியில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் துவக்கி வைத்தார்கோபிசெட்டிபாளையம் அருகேஉள்ளகரட்டடிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி, இந்திய மருத்துவ சங்கம் மற்றும் பல்வேறு சேவை அமைப்புகளின் சார்பில் உடல் ஆரோக்கியத்தை காப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
ஆண்கள்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவமாணவியருக்கு கல்லூரியில் இருந்து நாய்க்கன்காடு வரை 12 கிலோ மீட்டர் தூரத்திற்கும் பள்ளி மாணவ மாணவியருக்கு கல்லூரியில் இருந்து கள்ளிப்பட்டி வரை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கும் சிறுவர், சிறுமியருக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் கல்லூரியில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்குமான மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது
கல்லூரி முன்பு தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தை முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே. ஏ. செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். நான்கு பிரிவுகளாக நடைபெற்ற மாராத்தான் ஓட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you