கோபியில் வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது

5356பார்த்தது
கோபியில் வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது
கோபியில் வீடு புகுந்து வெள்ளி பொருட்கள் திருடிய வாலிபர் கைது

கோபி கிருஷ்ணன் வீதியைச் சேர்ந்தவர் சரோஜா வயது 77, கடந்த 18ஆம் தேதி இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் டிவியை மர்ம நபர் திருடி சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து வெள்ளி பொருட்களை திருடிய மர்ம நபரை வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கோபி பேருந்து நிலையம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் குருவ ரெட்டியூரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் விவேக் என்கிற கிட்டு வெள்ளையன் வயது 21 என்பதும், அவர் சரோஜா வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் மற்றும் டிவியை திருடியதும் தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் கிட்டு வெள்ளையன் மீது ஏற்கனவே 11 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதையும் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வெளியே வந்தவர் என்பதையும் கண்டுபிடித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி