முதியவருக்கு அனுமதி மறுத்த ஷாப்பிங் மாலுக்கு சீல்

64பார்த்தது
முதியவருக்கு அனுமதி மறுத்த ஷாப்பிங் மாலுக்கு சீல்
பெங்களூரில் உள்ள ஜிடி மாலுக்கு முதியவர் தனது மகனுடன் படம் பார்க்க சென்றுள்ளார். ஆனால், முதியவர் வேஷ்டி அணிந்திருப்பதாக கூறி அனுமதிக்கவில்லை. இந்த நிகழ்வை கண்டித்து கன்னட அமைப்பினர்கள் மாலின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில், ஜிடி வணிக வளாகத்தை 7 நாட்கள் மூட கர்நாடக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து மாலில் நடத்தப்பட்ட விசாரணையில், ரூ.1.78 கோடி வரி செலுத்தாமல் இருந்தது தெரியவந்தது. இதனால், அந்த வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி