கொய்யா ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதன் பண்புகள் நாள்பட்ட நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன. இந்த ஜூஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது. இவை செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும், புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். சளி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகளுக்கு எதிராக போராடுவதில் இது முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறப்படுகிறது.