கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் விருப்பாபூர் தண்டா பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண நாயக் இவருடைய மனைவி சௌமியா வயது 21 இரண்டு பேரும் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் இவர்கள் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தங்கிக் கரும்பு வெட்டும் தொழில் ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் வருகிற 21ஆம் தேதி சாமியாவின் தங்கை துளசி பாய்க்கு கர்நாடக மாநிலத்தில் திருமணம் நடக்க இருக்கிறது இதில் கலந்து கொள்ள வேண்டும் என சௌமியா அவர்களுடைய கணவர் கிருஷ்ண நாயக்கர் தெரிவித்து உள்ள அதற்கு அவர் 2 நாட்கள் பொறுத்திரு குடும்பத்துடன் அனைவரும் கலந்து கொள்ளலாம் என கூறினர் அதில் சௌமியா ஆத்திரம் அடைந்து அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் இது குறித்த தகவல் கிடைத்ததும் கோபி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சௌமியாவின் உடலை மீட்டனர் இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்