ராம்தேவ் பெருமாள் கோயில் 25ஆம் ஆண்டு தேர்த் திருவிழா

80பார்த்தது
ராம்தேவ் பெருமாள் கோயில் 25ஆம் ஆண்டு தேர்த் திருவிழா
ஈரோட்டில் வடமாநிலத்தவர் பங்கேற்ற ராம்தேவ் பெருமாள் கோயில் 25-வது ஆண்டு தேர்த் திருவிழா நேற்று(செப்.13) வெகு விமரிசையாக நடந்தது.

ஈரோட்டில் தொழில் மற்றும் வேலை நிமித்தமாக பல ஆண்டுகளாக வசிக்கும், ராஜஸ்தான் உள்பட பல்வேறு வட மாநிலங்களைச் சேர்ந்தோர், ஈரோடு மணிக்கூண்டு அருகே வெங்கடாசலம் வீதியில் 27 ஆண்டுகளுக்கு முன், ராம்தேவ் பெருமாள் கோவிலை உருவாக்கினர். இக்கோயிலில் ஆண்டுந்தோறும் ராம்தேவ் பெருமாள் தேர்த்திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம்.

அதன்படி, நடப்பாண்டு 25-வது ஆண்டு தேர்த்திருவிழா, கடந்த 5ம் தேதி தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு வழிபாடு, பூஜை நடந்தது. நிறைவு நாளான நேற்று காலை கோவிலில் இருந்து ராம்தேவ் பெருமாள் உருவச்சிலை தேரில் எடுத்து வரப்பட்டது. நேதாஜி ரோடு, சத்தி ரோடு, பிருந்தாவன் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜ் வீதி, வெங்கடாச்சலம் வீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. ஊர்வலத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என 1000க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி