காலி பணியிடங்களை நிரப்ப மனு

78பார்த்தது
காலி பணியிடங்களை நிரப்ப மனு
ஈரோடு மாவட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 7500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சாலைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்க ஈரோடு மாவட்டச் செயலாளா் ரங்கநாதன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: சாலைப் பணியாளா்கள் போராட்டத்தின்போது 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். இறந்த சாலைப் பணியாளா்கள் 300-க்கும் மேற்பட்டோரின் குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். தர ஊதியத்தை ரூ. 1, 900 ஆக உயா்த்தி அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 7, 500-க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இளைஞா்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நியமனம் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி