நம்பகத்தன்மை இல்லாத நீட் தேர்வு தேவையா? எம். யுவராஜா கேள்வி

51பார்த்தது
நம்பகத்தன்மை இல்லாத நீட் தேர்வு தேவையா? எம். யுவராஜா கேள்வி
நம்பகத்தன்மை இல்லாத நீட் தேர்வு தேவையா?
எம். யுவராஜா கேள்வி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி மாநில தலைவர் எம். யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட் டுள்ளதாவது: -

நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் 67 மாணவர்கள் முதல் மதிப்பெண் பெற்று உள் ளனர். அரியானா மாநிலத்தில் ஒரே மையத் தில் படித்த 6 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். இது தொடர்பான சர்ச்சை நாடு முழுவதும் எதி ரொலித்து வருகிறது. நாட்டில் சுமார் 1 லட்சம் மருத்துவ இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் 13 லட்சத்து 16 ஆயிரம் பேர் தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நீட் தேர்வை பொறுத்தவரை அதன் முடிவுகளை பார்க்கும்போது முறைகேடுகள் நடந்து உள்ளது உறு தியாக தெரிகிறது. உயிர்காக்கும் உன்னத சேவையான மருத்துவ பணிக்கு தகுதியானவர்கள் வரவேண்டும் என்பதில் மாற்றுக்க ருத்து இல்லை. ஆனால் அந்த தகுதியை நிர்ணயம் செய்யும் தகுதித்தேர்வு தகுதியாக நடத்தப்படுகிறதா? என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. சமீபத்தில் நடந்துள்ள நிகழ்வுகள் நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மையை முழுமையாக இழக்கவைத்துள்ளது. நம்பகத்தன்மை இல்லாத நீட் தேர்வு தேவையா?. தொடக்கத்தில் இருந்தே நீட் தேர்வு தேவை இல்லை என்பதே எங்கள் நிலைப்பாடு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி