தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம்

79பார்த்தது
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் இன்று நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர் விக்ரம் ராஜா கலந்து கொண்டு பேட்டி அளித்தார், அப்போது பேசுகையில், வணிகர்களின் கோரிக்கையினை ஏற்று தேர்தல் விதிமுறை தளர்வு அளிக்கப்பட்டுள்ளது அதற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். வரும் மே ஐந்தாம் தேதி மதுரையில் வணிகர்களின் சார்பாக மிகப்பெரிய மாநாடு நடைபெற உள்ளது அதை விடுதலை முழக்க மாநாடாக 2024 ஆம் ஆண்டில் வணிகர் மாநாடு நடைபெற உள்ளது. மே விடுமுறை தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவித்தல் வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட கடைகளை ஏற்கனவே அங்கு கடைகளை வைத்திருந்த வியாபாரிகளுக்கு நியாயமான வாடகை விதத்தில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். GST வரிவசூலிப்பில் அதிகமாக வசூலித்துக் கொடுக்கும் இரண்டாவது மாநிலம் தமிழகம். தமிழகம் செழிப்பாக மாற மத்திய அரசு போதிய நிதியை வழங்க வேண்டும்.
வியாபாரம் செய்கிறோம் வரி கட்டுகிறோம் மற்றவைகள் எல்லாம் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து பேசிய அவர்,
வரிகள் கட்டாயம் நாட்டுக்கு தேவை எனவும் வரி கட்ட மாட்டோம் என்று நாங்கள் சொல்லவில்லை ஆனால் அரசு வரிவிதிப்பை எளிமைப்படுத்த வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி