காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் குகன் (61). தொழில் காரணமாக நேற்று முன் தினம் (14ம் தேதி) ஈரோடு வந்த அவர், தனியார் ஓட்டலில் தங்கியுள்ளார். ஆனால், நேற்று (15ம் தேதி) காலை வரை ரூம் திறக்காமலும், போன் செய்தால் எடுக்காமலும் குகன் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள், ரூம் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, குகன் சடலமாக கிடந்தார். பின்னர் ஈரோடு டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், குகனுக்கு ஏற்கனவே நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. பின்னர் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.