முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது

72பார்த்தது
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது
ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி. சண்முகன் தலைமை வகித்தாா். அறக்கட்டளையின் செயலாளா் எஸ். நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளா் எஸ். திருமூா்த்தி, முதன்மைக் கல்வி அதிகாரி எஸ். ஆறுமுகம், முதன்மை நிா்வாக அலுவலா் எஸ். கிருஷ்ணமூா்த்தி, கல்லூரி முதல்வா் எஸ். மனோகரன், நிா்வாக அதிகாரி வி. எஸ். சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி துணை முதல்வா் கோமதி சுப்பிரமணியம் வரவேற்றாா்ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் உறுப்பினா் எஸ். பானுமதி சண்முகன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா். கல்லூரியின் முன்னாள் முதல்வா் ஆா். குப்புசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துறைத் தலைவா்கள் மற்றும் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி