ஈரோட்டில் இருந்து புறப்பட்ட தூய்மை பணியாளர்கள்

69பார்த்தது
ஈரோட்டில் இருந்து புறப்பட்ட தூய்மை பணியாளர்கள்
சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில் அங்குள்ள மாநகராட்சி நிர்வாகத்தினர் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் இரவு பகலாக பணியாற்றி வரும் நிலையில், அவர்களுக்கு உதவிடும் வகையில் அங்கு தூய்மை மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஈரோடு மாநகராட்சியில் இருந்து தூய்மை பணியாளர்களை அனுப்பி வைக்க மாநகராட்சி ஆணையர் மனிஷ் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து சுகாதார ஆய்வாளர்கள் மணிவேல், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில், 4 சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் 100 தூய்மைப் பணியாளர்கள், 2 பஸ்கள், ஒரு ஜீப், ஒரு லாரியில் சென்னை புறப்பட்டு சென்றனர்.

அவர்கள், தங்களுக்குத் தேவையான கையுறைகள், முகக் கவசம் மற்றும் பூட்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தூய்மை மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் ஆகியவற்றுடன் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் சென்ற பஸ்சை ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மா நகராட்சி ஆணையர் மனிஷ், துணை மேயர் செல்வராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தூய்மை பணியாளர்கள் சென்னையில் சில நாட்கள் தங்கி தூய்மை பணிகளை மேற்கொள்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி