புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள செலவனூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் வயது 40 விவசாயி சம்பவத்தன்று இவருடைய வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு போனது இது குறித்து சக்திவேல் புஞ்சை புளியம்பட்டி போலீசார் புகார் அளித்தார் அதன் பெயரில் போலீசார் இருசக்கர வாகனத்தை தேடி வந்தனர் அப்போது அண்ணமார் கோவில் அருகே சக்திவேலின் இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டதை கண்டுபிடித்தனர் திருடி செல்லும் போது பெட்ரோல் தீர்ந்ததால் இருசக்கர வாகனத்தை அங்கு விட்டு விட்டுச் சென்று தெரிய வந்தது இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்