சத்தியமங்கலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் 265-வது பிறந்த நாள் விழாவில் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டு கட்டபொம்மன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் கட்டப்பொம்மன் வசனம் பேசி பலரையும் கவர்ந்தார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பழைய பஸ் நிலையம் முன்பு தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பில் மாமன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் 265வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
குறிப்பாக இந்த விழாவில் கலந்து கொண்ட அ. தி. மு. க. முன்னாள் அமைச்சர் கே. ஏ செங்கோட்டையன் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, பூக்கள் தூவி மரியாதை செய்த பின்னர் பேசிய அவர் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆங்கிலேயர்கள் வரி ஏன் கொடுக்க மறுக்கிறாய் என கேட்ட போது என்னுடன் வயலுக்கு வந்தாயா எம் குலப் பெண்களுக்கு மஞ்சள் அறைத்து கொடுத்தாயா மாமனா மச்சான எதற்கு கேட்கிறாய் வரி என்ற வசனத்தை பேசினார் அப்போது அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
பின்னர் அங்கு வந்த ஈரோடு
திமுக மாவட்ட செயலாளர் நல்லசிவம் கலந்து கொண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து பேசி அவருக்கு புகழாரம் சூட்டினார்.