நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு

73பார்த்தது
சத்தியமங்கலம் அருகே நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ச் அணிந்து ஏராளமான பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பு. நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க கூடாது என வலியுறுத்தி கிராம சபை கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட
கொமாரபாளையம் மற்றும் சதுமுகை ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொமாரபாளையம் மற்றும் சதுமுகை ஊராட்சிகளை சத்தியமங்கலம் நகராட்சியுடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு பேட்ஜ் அணிந்து கிராம சபையில் பங்கேற்றனர். கிராம ஊராட்சிகளை சத்தியமங்கலம் நகராட்சியுடன் இணைக்கும் தமிழக அரசின் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சத்தியமங்கலம் தாசில்தார் சக்திவேல் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் சமாதானம் அடையவில்லை.
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதால் 100 நாள் வேலை திட்டத்திற்கு செல்லும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், சொத்து வரி வீட்டு வரி உள்ளிட்ட வரிகள் உயர்ந்து மக்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி