ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கையில், இந்தி மொழியில் வெளியாகியுள்ள 'ஜாட்' திரைப்படம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, தாயக விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. தடை செய்ய தவறும் பட்சத்தில் பெரும் மக்கள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுத்து திரையரங்குகளை முற்றுகையிடும் என எச்சரித்துள்ளார்.