ஈரோடு மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் வனத்துறை மற்றும் அதிரடி படையினருடன் இணைந்து கடம்பூர் வனச்சராகப் பகுதியில் நக்சல் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். குத்தி, மாத்தூர், அரிசியும், மாரி, கட்டை, ஓரு சட்டி, பள்ளம், வாட்டாள், மடவு, கோம்பை, தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் 14 கிலோ மீட்டர் தூரம் நடந்து தேடினார்.
மேலும் இது குறித்து போலீசார் கூறியதாவது, நக்சல் தேடும் வழித்தடத்தில் புலி, கரடிகளின் கால் தடம் மற்றும் எச்சம் காணப்பட்டது. அப்பகுதிகளில் நீரோட்டம் இருப்பது புதிய நபர்களுக்குக் குறிப்பாக நக்சல் நடமாட்டத்திற்கு ஏதுவாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு தான் தேடுதலில் ஈடுபட்டோம். அப்பகுதி வன கிராமங்களில் புதிய நபர்கள் நடமாட்டம் குறித்து போலீசருக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.