சத்தி அரசு கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் மற்றும் தேர்தல் பிரிவு இணைந்து தேர்தல் விழிப்புணர்வு பேரணிக்கு முதல்வர் முனைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். விழிப்புணர்வு பேரணியை சத்தி தேர்தல் துணை வட்டாட்சியர் ராஜசேகர் கொடியசைத்து துவக்கி வைத்தார். அரசு கல்லூரியில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக குமாரபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முடிவடைந்தது. "நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்த பதாகைகளை ஏந்தியும் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு கோஷங்களையும் எழுப்பி சென்றனர். விழிப்புணர்வு பேரணியில் கல்லூரியின் பேராசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.