கோடை வெயில் தாக்கம் துவங்கியதால் பவானி பகுதியில் தர்பூசணி விற்பனை சூடு பிடித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக காலை 11 மணியிலிருந்து மாலை நான்கு மணி வரை, ஈரோடு மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயிலை தாக்குப் பிடிக்க முடியாமல் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் வருவதற்கு அச்சப்பட்டு வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்.
பவானி பகுதியில் பகல் நேர வெயிலில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது. இந்நிலையில், கோடை வெயிலுக்கு இதமாக, பவானி–மேட்டூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே தர்பூசணி குவிக்கப்பட்டு விற்பனையில் முமரமாக வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஐந்து நாட்களாக தர்பூசணி வியாபாரம் மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு கிலோ தர்பூசணி 25 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தர்பூசணி கீற்று பத்து ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தர்பூசணி திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வரத்தாகி விற்பனை சூடு பிடித்துள்ளது.