சரக்கு வாகனத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்த வாலிபர்

72பார்த்தது
சரக்கு வாகனத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்த வாலிபர்
ஈரோடு வ. உ. சி பூங்கா பெரிய காய்கறி மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பல்வேறு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து காய்கறி லோடுகளை ஏற்றி வருகின்றன. பின்னர் லோடுகளை இறக்கி விட்டு வாகனத்தில் வருபவர்கள் வ. உ. சி பூங்கா பின்புறம் ஏ. பி. பி சாலையோரம் வாகனங்களை நிறுத்தி தூங்குவது வழக்கம்.

அதைப்போல் இரவு கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து ஒரு மினி சரக்கு வாகனம் தக்காளி லோடுகளை ஏற்றிக்கொண்டு பெரிய மார்க்கெட்டிற்கு வந்தது. மினி சரக்கு வாகனத்தை கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மனோஜ் (32) என்பவர் ஓட்டி வந்தார். பின்னர் அவர் தக்காளி லோடுகளை மார்க்கெட்டில் இறக்கிவிட்டு வஉசி பூங்கா பின்புறம் ஏபிபி சாலையோரம் தனது வாகனத்தை நிறுத்தி வாகனத்தின் முன் பகுதியில் தூங்கினார்.

அந்த வழியாக சென்ற பெண் ஒருவர் மனோஜை எழுப்பி உன் வாகனத்தின் பின்பகுதியில் ஒருவர் இறந்து கிடப்பதாக கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மனோஜ் பின்னால் சென்று பார்த்தபோது சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இவர் யார் என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி