ஈரோடு: போலி பீடி கம்பெனிகளை தடைசெய்யக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

57பார்த்தது
ஈரோடு: போலி பீடி கம்பெனிகளை தடைசெய்யக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே பீடி சுருட்டு தொழிலாளர் சங்கத்தினர்(சிஐடியு) நேற்று (நவம்பர் 28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சித்தாரா பேகம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில பீடி தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் திருச்செல்வன் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 

பீடி தொழிலில் இருந்து வசூலிக்கும் 28 சதவீத ஜிஎஸ்டி தொகையில் இருந்து பீடி தொழிலாளர் சேமநல திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும். அனைத்து பீடித்தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். பீடி தொழிலாளர் குழந்தைகளுக்கு உதவித்தொகை, வீடு கட்ட மானியத்துடன் கடன், நிலுவை தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும். பீடிதொழிலாளர் ஆலோசனை குழுவை அமைக்க வேண்டும். வீடற்ற பீடி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, மானிய தொகையில் வீடு கட்டித்தர வேண்டும். சட்டப்படியான கூலி, பஞ்சப்படி வழங்க வேண்டும். பீடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பீடித்தொழிலாளர் சட்டத்தை மீறும் டிரேட் மார்க் பீடி கம்பெனிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி பீடி கம்பெனிகளை தடை செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி