உயிரியல் பூங்காவில் கொரில்லாவுக்கு நேர்ந்த பரிதாபம்

76பார்த்தது
உயிரியல் பூங்காவில் கொரில்லாவுக்கு நேர்ந்த பரிதாபம்
கனடாவில் உள்ள மிருகக்காட்சிசாலையில் உள்ள கொரில்லா, ஊழியர் ஒருவர் ஹைட்ராலிக் கதவைத் தவறுதலாக இயக்கியதால் உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் ஆல்பர்ட்டாவில் உள்ள கால்கரி உயிரியல் பூங்காவில் 2 வயதான வெஸ்டர்ன் லோலேண்ட் கொரில்லாவான 'ஐரே' இறந்தது.  கொரில்லாவின் தலையில் கதவு இடித்ததில் காயம் ஏற்பட்டது. கால்நடை மருத்துவக் குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தும் பயனில்லை. விபத்தை அடுத்து, வேறு பகுதிக்கு ஊழியரை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி