பாலத்தில் இருந்து விழுந்த பெட்ரோல் லாரி.. ஓட்டுநர் பலி

85பார்த்தது
பாலத்தில் இருந்து விழுந்த பெட்ரோல் லாரி.. ஓட்டுநர் பலி
மதுரை மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு இந்தியன் ஆயில் பெட்ரோல் லாரி சென்றுகொண்டிருந்தது. அப்போது, திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பழநி ரோடு மேம்பாலத்தில் லாரியின் டயர் வெடித்தது. இதில், நிலைதடுமாறிய லாரி பாலத்தில் இருந்து கீழே கவிழ்ந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் லாரியின் ஓட்டுநர் சந்திரசேகர் (60) உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி