ஈரோட்டில் போலி மது பாட்டில்கள் விற்ற இருவர் கைது

5175பார்த்தது
ஈரோட்டில் சட்டவிரோத போலி மதுபான பாட்டிலை பதுக்கி விற்பனை செய்து வந்த இருவர் கைது. 270 போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல்

ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் போலி மதுபானங்கள் விற்பனையை தடுக்க மதுவிலக்கு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் பச்சப்பாளி, சோலார் மேடு உள்ளிட்ட பகுதிகளில் சிலர் போலி மதுபானங்களை விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

அதன் பேரில் சார்பு ஆய்வாளர் குகனேஸ்வரன் தலைமையிலான போலீசார் தீவிரமாக ரோந்து சென்று கண்காணித்து வந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் பச்சப்பாளி மேடு பகுதியில் செயல்படும் அரசு மதுபான கடையின் அருகே சட்டவிரோதமாக போலி மதுபானத்தை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

அதேபோன்று சோலார் மேட்டில் செயல்படும் அரசு மதுபான கடையின் அருகே தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் என்பவர் போலி மதுபானங்களை விற்பனை செய்வதும் தெரிய வந்தது. உடனடியாக இருவரையும் கைது செய்து மதுவிலக்கு போலீசார் 270 போலி மதுபான பாட்டில்களையும் பறிமுதல் தொடர்ந்து கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் காளீஸ்வரன் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி