CSK vs RCB: 174 ரன்கள் இலக்கு நிர்ணயம்

557பார்த்தது
CSK vs RCB: 174 ரன்கள் இலக்கு நிர்ணயம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎஸ் முதல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இன்று விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற RCB அணி முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது. பவர் பிளேவில் நன்றாக ஆடிய அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்நிலையில் RCB 20 ஓவர் முடிவில் 173 ரன்கள் எடுத்துள்ளது. தினேஷ் கார்த்திக் - அனுஜ் ராவத் ஜோடி 87* (44) ரன்கள் குவித்தது. CSK அணிக்காக முதல் போட்டியில் விளையாடிய முஸ்தஃபிசுர் ரஹ்மான் 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அடுத்ததாக 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் CSK களமிறங்கவுள்ளது.

தொடர்புடைய செய்தி