ஆலமரத்தில் தீ

2611பார்த்தது
ஆலமரத்தில் தீ
அம்மாபேட்டை அருகே பட்லூரில் பிரசித்தி பெற்ற கரியகாளியம்மன் கோவில் உள்ளது. கோவில் முன்புறம் சுமார் 50 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு, ஆலமரத்தில் திடீரென தீப்பிடித்து எரிவதைக் கண்ட மக்கள் அந்தியூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.‌ சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு மரத்தில் மீண்டும் தீப்பிடித்தது.‌ தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து சென்றனர். வலுவிழந்து காணப்படும் ஆலமரத்தில் இரண்டு முறை தீ பிடித்தது சம்பந்தமாக, வருவாய்த்துறையினரும், வெள்ளித்திருப்பூர் போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.
மரக்கிளைகள் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயத்தில் இருப்பதால், தீயில் கருகிய கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி