பெருந்துறையை அடுத்துள்ள பல்ல கவுண்டன் பாளையம் பகுதியில் நாளை மின்வினியோகம் இருக்காது.
பெருந்துறையை அடுத்துள்ள பல்ல கவுண்டம்பாளையம் துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்ல கவுண்டம்பாளையம் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பல்ல கவுண்டம்பாளையம், சாமியார் பாளையம் , கூனம்பட்டி , சாம்ராஜ் பாளையம், கஸ்தூரிபாளையம் , பழனி கவுண்டம்பாளையம், தாசம்பாளையம் , பகலாயூர், விஜயமங்கலம் , கள்ளியம்புதூர், மேட்டுப்புதூர் , பெரிய வீரசங்கிலி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.