அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் திடீர் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், "சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர், இபிஎஸ் டெல்லி பயணம் குறித்து கூறியுள்ளார். மேலும், இபிஎஸ் சந்திக்க உள்ளவர்களிடம் இரு மொழிக் கொள்கைக் குறித்து தயவு செய்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் வைத்துள்ளார்" என்று பேட்டியளித்துள்ளார்.