திமுகவை எதிர்கொள்ள முடியாமல் ஓடும் இபிஎஸ்

60பார்த்தது
திமுகவை எதிர்கொள்ள முடியாமல் ஓடும் இபிஎஸ்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆட்சி அதிகாரத்தை சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஆளும் திமுகவை எதிர்கொள்ளமுடியாமல் தேர்தல் களத்திலிருந்து வெளியேறியிருப்பதன் மூலம் பழனிசாமியை தமிழக மக்கள் ஏற்கனவே புறக்கணித்துவிட்டார்கள் என்பது தெள்ளத்தெளிவாகிறது. அராஜகத்திற்கும் அத்துமீறல்களுக்கும் அடையாளமாகிப் போன திமுகவிற்கும், மக்களை சந்திக்கமுடியாமல் தேர்தலை புறக்கணித்து புறமுதுகிட்டு ஓடும் பழனிசாமிக்கும் தகுந்த பாடம் புகட்டும் வகையில் பாமக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி